Tamil kamakathaikal new தளத்தில் வரும் தமிழ் காம கதைகள், பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே..

Tamil Kamakathaikal New

Read latest tamil kamakathaikal

  • ஐ லவ் யு சைந்தவி... ...1 , 2 , 3 . 4  ஐ லவ் யு சைந்தவி... ...1 I love you-by Sainthavi (ஐ லவ் யு சைந்தவி... ...) வடிவேலுவோட காமெடிய கூட சீரியசா மூஞ்ச வெச்சுகிட்டு கோவமா பார்க்கற என் அப்பா,நீ பேசுன பேச்சுல விழுந்து விழுந்து சிரிச்சப்பதாண்ட உன்ன நான் நிமிர்ந்து பார்த்தேன்.ப்ளூ கலர் செக்டு ஷர்ட், ப்ளாக் கலர் ஜீன்ஸ் போட்டுகிட்டு என்ன பொண்ணு பார்க்க வந்துருந்த..ரொம்ப சுப்பர்லாம் இல்ல...பட்,நல்லா இருந்த...மறுபடியும் ஒரு தடவ நிமிர்ந்து பார்க்க வெக்கற அளவுக்கு...அப்ப நான் சத்தியமா நெனைக்கல,நமக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் கழிச்சு உனக்கு நான் இப்டி ஒரு லவ் லெட்டர் எழுதுவேன்னு... உலகத்துலேயே எனக்கு ரொம்ப புடிச்சது எங்க அப்பாவ...ஆனா,கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்துல எங்கப்பா பொறந்த நாள் கூட மறக்க வெச்சுடியேடா பாவி...நான் அடுத்த நாள் எங்கப்பாவுக்கு போன் பண்ணி எவ்ளோ அழுதேன் தெரியுமா..என்ன என்னமோ பண்ணிட்ட நீ... ! என்னோட காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாரையும் வெச்சுகிட்டு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நீ எங்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்ப எனக்கு வந்த கோவத்துக்கு உன் கழுத்த புடிச்சு உள்ள ரூமுக்குள்ள இழுத்துகிட்டு போய் கதவ சாதிக்கணும் போல இருந்துச்சு...எதுகுன்லாம் கேக்காத... நம்ம ஹனி மூன் போனது,அங்க நீ எனக்கு தம் அடிக்க கத்து குடுத்தது..என்ன போட்டு பாடா படுத்தினது...என் பர்த்டே பிரசன்ட்னு நீ குடுத்த அந்த கிப்ட்..(அசிங்கம் புடிச்சவன்டா நீ..எப்டி அதெல்லாம் யோசிச்ச....!) உனக்கு மட்டும் எப்டி தோணுது .இப்டியெல்லாம் குறும்பு பண்ண... வாலு பயலே .இந்த ஏழு வருசத்துல என்னவெல்லாம் பண்ணிருக்க.... எங்கம்மா என்ன தொட்டு பேசுனா கூட எனக்கு புடிக்காது...பாவி பயலே..கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துல என்ன என்னேனல்லாம் பண்ண...அப்போல்லாம்,என்ன கண்ணாடில பார்க்க எனக்கே எவ்ளோ கூச்சமா இருந்துச்சு தெரியுமா... எங்கப்பா என்ன பார்க்க ப்ளைட்ல வந்தப்போ,"ஒப்பன் வந்துட்டான் போல..இவ்ளோ நேரம் அழகா இருந்த ஏர்போர்ட் திடீர்னு சூனியம் புடிச்ச மாதிரி இருக்குனு சொல்லி என்ன நீ சிரிச்சுகிட்டே அழ வெச்சது..."உன்னால மட்டும் ஒரு நாளைக்கு 25 மணி நேரம் ஜோக் அடிக்க எப்டிடா முடியுது.. யார்கிட்டடா கத்துகிட்ட..இப்டி காமெடி பண்ணியே என்ன கவுக்கற வித்தைய.... எவ்ளோ தண்ணியடிச்சிட்டு மட்டையானாலும் என் அப்பாவ கிண்டல் பண்றப்ப மட்டும் உடனே தெளிவா பேசுறியே எப்டிடா அது...இனிமேவாச்சும், எங்கப்பாவ அவன் இவன்னு சொல்லாதடா ப்ளீஸ்.. நமக்கு குழந்த பொறந்தப்போ நீ உங்கம்மா கைய புடிச்சிகிட்டு தேம்பி தேம்பி அழுதியாமே...எங்க அத்த சொன்னங்க...அத கேட்டோன்ன, எனக்கும் அழுக வந்துடுச்சு தெரியுமா..என்ன உனக்கு அவ்ளோ புடிக்குமாடா...? ம்..சொல்ல மறந்துட்டனே...நம்ம கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ எங்க வீட்டுக்கு வந்தப்போ,ஒரு கிஸ் குடுக்கறதுக்கு வேர்த்து விட்டு ,உளறி கொட்டி ,பயந்து நடுங்குன நீ,இப்ப எப்டியெல்லாம் மாறிட்ட..ராட்சஷா..(நீ அன்னிக்கு கிஸ் கொடுப்பேன்னு நான் எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா...நீ பாட்டுக்கும் பெரிய மயிர் மாதிரி நல்லவனாட்டம் போய்ட்ட...ச்சே,உன்னோட சேர்ந்து சேர்ந்து எனக்கும் கேட்ட வார்த்தையெல்லாம் வருது...) உன்கிட்ட எனக்கு புடிக்காதது ஒன்னே ஒண்ணுதாண்டா..கோவம் வந்தா வெளில காமிக்காம உள்ளேயே வெச்சுக்கறது..இப்போ உன் மகளும் அப்டியேதான் பண்றா...உன்கூட ஒருதடவையாவது கண்ணா பின்னான்னு சண்ட போடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு...கொஞ்சம் கோவப்படேன்... ஆனா உன் பொண்ணு வந்தோன்ன என்ன நீ முன்னாடி மாதிரி கவனிக்க மாட்ரடா..ஜாடமாடையா கேட்டா,இது நான் பெத்த பொண்ணு,கொஞ்சறேன்.எவன் பெத்த பொண்ணையோ நான் எதுக்கு கொஞ்சனும்னு நக்கல் வேற..அவ வர்றதுக்கு முன்னாடி தெரிலையா நான் எவன் பெத்த போன்னொன்னு... இரு என்னிக்காச்சும் கெஞ்சுவ அன்னிக்கு வெச்சுகறேன்.. ஆனா இதுவரைக்கும் யாரையும் நான் லவ் பண்ணதில்லன்னு நீ சொல்றததான் என்னால நம்பவே முடிலடா...நீ பேசுற பேச்சுக்கு கண்டிப்பா மாட்டிருபாளுகளே.... ஆமாம்,எப்போதுமே ஜோக் அடிச்சிட்டு இருக்கற நீ இப்பல்லாம் அப்டி இல்லையே ஏன்டா..ஒரு வேலை,நமக்கும் வயசாவுதோ... உன்னோட வாழ்ந்த இந்த வாழ்க்கைய மறுபடியும் ஒரு தடவ வாழணும்னு ஆசையா இருக்குடா...முத்திக்குட்டி...ப்ளீஸ்டா...என்ன மறுபடியும் ஒரு தடவ பொண்ணு பார்க்க வர்றியா... I love you-by Sainthavi. எழுதுன லெட்டர மனசுக்குள்ள ஒரு தடவ படிச்சு பார்த்து சிரிச்சிட்டு ,பக்கத்துல அவன் பெத்த பொண்ண கட்டிபுடிச்சு தூங்கிட்டிருந்த சிபிய ஓரக்கண்ணால ரசிச்சிகிட்டே,எப்டி ரொமாண்டிக்கா இந்த லெட்டர இவன்ட்ட குடுக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சா சைந்தவி..மணி 3.47னு வெளில இருட்டுகிட்ட கடலை போட ஆரம்பிச்சது நிலா.... சைந்தவி புருசனோட பதில் காதல் கடிதம்... மீ டூ சைந்தவி...! - சைந்தவி புருஷன். முப்பது வருஷம் ஆச்சுடி முத்திகுட்டி...ஐ லவ் யு பை சைந்தவினு போட்டு உன்கிட்டேர்ந்து இந்த லெட்டர் வந்து..! போன வாரம் நடந்த மாதிரி இருக்கு..அப்போ நமக்கு கல்யாணம் ஆகி ஒரு ஏழு எட்டு வருஷம் இருக்கும்னு நெனைக்கறேன்.. அன்னிக்கு அந்த லெட்டெர படிச்சிட்டு சிரிச்சிகிட்டே உன்ன கட்டிபுடிச்சு உன் காதுல ஏண்டி உங்கப்பன் சிரிக்கறப்ப லூஸ் மோகன் மாதிரியே இருக்கான்னு கேட்டு அப்பவும் உன்ன சிரிக்க வெச்சேன்...அன்னிக்கு தோணல...திரும்ப உன்கிட்ட ஐ லவ் யு சொல்லனும்னு... ஏன் தோணலைன்னு தெரியல..நான் வார்த்தைல சொல்லித்தான் என் காதல் உனக்கு தெரியனுமாங்கர கர்வமா..இல்ல என்கூடவேதான இருக்கபோறா இவங்கர திமிரான்னு தெரில...ஆனா இன்னிக்கு தோணுது...உனக்கு பதில் எழுதனும்னு. அதுவும் உன் போட்டோவ பார்த்துகிட்டே எழுதனும்னு.. .. மீ டூ சைந்தவி...நானும் உன்ன ரொம்ப லவ் பண்ணேன்...பண்றேன்...பண்ணுவேன்... எல்லா ட்ரெஸ்ளையும் என் தங்கக்குட்டி ராசாத்தி மாதிரிதான் இருப்பான்னு நான் உன்கிட்ட சொல்ற எல்லா பொய்க்கும், அது பொய்ன்னு தெரிஞ்சும் வெக்கப்பட்டு சிரிப்பியே ஒரு சிரிப்பு..அதுக்கே உன்ன இன்னொருதடவ கட்டிக்கலாம்டி.... ஆக்சுவலா நாம கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ உன்ன இறுக்கி கட்டிபுடிச்சு உன் உதட்ட கடிக்கனும்போலதான் இருந்துச்சு...ஆனா நீ என்ன தப்பா நெனைச்சிடுவியோன்னுதான் ஒன்னும் செய்யாம வந்துட்டேன்..இப்ப உள்ள சைந்தவியா இருந்தா எனக்கு கரெக்டா தெரிஞ்சிருக்கும்...நீ மனசுக்குள்ள என்ன நெனைக்கறேன்னு... நாம ஹனிமூன் போனப்போ நான் உனக்கு குடுத்த அந்த கிப்ட்...பயந்துகிட்டே குடுத்தேன் தெரியுமா...உனக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு...அத பிரிச்சு பார்த்துட்டு நீ விழுந்து விழுந்து சிரிச்சப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு...அப்போ தோனுச்சு..என் மிச்ச வாழ்க்கை சொர்க்கம்னு..லைப ரசிக்க தெரிஞ்ச பொண்டாட்டி கெடைச்ச எல்லாருக்கும் வாழ்க்கை சொர்க்கம்டி.. ஒருநாள் ராத்திரி ஓவர் மூட்ல நீ என்கிட்டே உலருனத எல்லாம் உனக்கு தெரியாம ரெகார்ட் பண்ணி உன் நம்பருக்கு ரிங் டோனா வெச்சுகிட்டதுக்கு ஏண்டி அன்னிக்கு அவ்ளோ அழுத...உனக்கு புடிக்காமத்தான் அழறபோலன்னு நெனைச்சுகிட்டு அவசரம் அவசரமா நான் அத டெலிட் பண்ணப்பரம் சொன்ன...ஐ லவ் யூன்னு.. பஸ்ல போகும்போது என் தோள்ள சாயிஞ்சிகரதுக்காக தூக்கம் வர்ற மாதிரி நடிக்கறது..டேய் நடிக்காதடி நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும்னு சொன்னா..அதெல்லாம் இல்ல,நான் தூங்கிக்கிட்டுதான் இருக்கேன்னு சொல்லி உங்கப்பன் முட்டாள்னு கன்பார்ம் பண்றது... என் புருஷன் மீன் குழம்பு எப்டி வெப்பாரு தெரியுமான்னு நீ ஒரு கல்யாணத்துல உன் சொந்தகாரங்ககிட்ட பீத்திகிட்டப்போ மண்டபமே என்ன பார்த்து சிரிச்சிது...ஆனா நீ அவங்க ஏன் அப்டி சிரிக்கராங்கன்னு கூட தெரியாம பேந்த பேந்த என்ன பார்த்து பாவமா முழிச்சு என் மானத்த வாங்குனியே..ச்சே, ஆனா அன்னிக்கு நைட் உங்கப்பன கொஞ்சம் ஓவராதாண்டி உன்கிட்ட திட்டிட்டேன்..சாரி குட்டி.. எங்கப்பாவ கெட்ட வார்த்தைல திட்டாதடா ப்ளீஸ்னு இதுவரைக்கும் ஒரு முப்பதாயிரம் தடவ என்கிட்டே கெஞ்சிருப்ப..எனக்கே சில சமயம் பாவமாதான் இருக்கும் நீ கெஞ்சறத பார்த்தா...எனக்கும் அவன புடிக்கும்...நல்ல மனுஷன்...பாசமா இருப்பான் எல்லார்கிட்டயும்...ஆனா எனக்கு வேற வழி இல்ல... ஏன்னா உங்கப்பன திட்ட ஆரம்பிச்சாதான நீ என்ன பேச விடாம பண்றதுக்கு இருக்கமா கட்டிபுடிச்சு முத்தம் குடுத்துகிட்டே இருப்ப... பேசவிடாம உதட்டுலையே... நீ நெறைய தடவ கேட்ருக்க...கல்யாணத்துக்கு முன்னாடி நீ யாரையும் நெஜமாவே லவ் பண்ணலையான்னு..பண்ணேன்..ஆனா அப்பவும் உன்னதான்டின்னு நான் சொன்ன உண்மைய நீ ஒருதடவ கூட நம்புனதே இல்ல..ப்ளீஸ் இப்பவாச்சும் நம்பு..நீ யாருன்னு தெரியறதுக்கு முன்னாடியே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்... நமக்கு குழந்த பொறந்தப்போ நான் அழக்கூடாதுன்னுதாண்டி நின்னுட்ருந்தேன்..ஆனா எங்கம்மாவ பார்த்தோன்ன அழுகை வந்துடுச்சு..ஏன்னே தெரில.. அன்னிக்கு நீ கஷ்டப்பட்டத பார்த்தப்போ தோணுச்சு..நீ இனிமே அழுகவே கூடாதுன்னு..சிரிச்சிகிட்டு மட்டுமே இருக்கணும்னு...இப்ப கூட நீ தூக்கத்துல சிரிக்கற..கனவுல கூட நாந்தான் வர்றேன் போல.... குழந்த பொறந்து மூணு மாசத்துல நான் ரூமுக்குள்ள வரும்போதெல்லாம் டேய் வேணாம்டா..ப்ளீஸ்டா...பாப்பு பாவம்டானு நீ கெஞ்சுனாலும் உன் கண்ணு கதவ சாத்த சொன்னது... செக்ஸ்ல நான் உனக்கு கத்துகுடுத்தது, எனக்கு நீ கத்து குடுத்தது, நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து கத்துகிட்டது. எனக்கு புடிச்ச அந்த குட்டி மச்சம்..உன் வேர்வை வாசம்..சொருகி கெடக்குற உன் அழகு கண்ணு...எத சொல்ல.....யு ஆர் செக்ஸிடி. உனக்கு குடுக்க வேண்டிய முத்தத்த எல்லாம் சேர்த்து நான் என் பொண்ணுக்கே குடுக்கறேன்னு நீ கம்ப்ளைன்ட் பண்ணிட்ருந்தப்போ நான் மறுபடியும் பாப்புக்கே முத்தம் குடுத்தத பார்த்து கடுப்பாகி அவகிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுந்தத பார்த்து எனக்கு சிரிப்புதாண்டி வந்துது..நான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா... நீ என்ன கொஞ்சற செல்லபேர்லாம் சொல்லி நான் பாப்புவ கொஞ்சுனப்போ டேய் சொந்தமா யோசிடா..நான் உங்கிட்ட சொன்னத காப்பி அடிக்காதடானு சத்தமா சொல்லி என் அம்மா முன்னாடி என் மானத்த வாங்கினது...மாங்காபய மவடி நீ... பாப்புவுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது அவகிட்ட சொல்லிக்குடுத்து உனக்கு ஐ லவ் யு சொல்லசொன்னப்போ உனக்கு சந்தோசமா இருந்தாலும் ஏன் நீனே சொன்னா என்னாவாம்னு கோவமா கேக்கற மாதிரி கெஞ்சுனது... புக்ஸ் படிக்க புடிக்குமான்னு நான் கேட்டதுக்கு , உன்ன லவ் பண்ணவே எனக்கு டைம் பத்தல..இதுல நான் எங்கேந்துடா புக்ஸ் படிக்கனு நீ சொன்னப்போ முடிவு பண்ணேன்..நான் ப்ளாக் எழுதறத உன்கிட்ட சொல்லவே கூடாதுன்னு.. என்கிட்டே நீ சொன்ன ஏ ஜோக்ஸ்..வீம்புக்கு போட்டி போட்டு பீர் அடிச்சிட்டு பச்சை பச்சையா கெட்ட வார்த்தை பேசி உளறோ உளருனு விடிய விடிய உளறி என்ன விழுந்து விழுந்து சிரிக்க வெச்சது.. ஒரு நாள் நான் நெறைய தண்ணியடிச்சிட்டு வந்ததுக்கு கன்னாபின்னான்னு திட்டிட்டு நடு ராத்திரி எந்திரிச்சு எனக்கு முத்தம் குடுத்துட்டு என்னையே பார்த்துட்டு படுத்துருந்தியே ஏண்டி..செல்லத்த திட்டிட்டமேன்னா..உனக்கு ஒன்னு தெரியுமா நான் அப்போ முழிச்சிட்டுதான் இருந்தேன்..நாங்கல்லாம் ஒரு புல் அடிச்சிட்டு அசராம ஆத்திச்சூடி சொல்றவங்கேடி..அன்னிக்கு நான் அடிச்சிருந்தது வெறும் பீரு..ஆனா அடுத்த நாள் காலைல நீ வெரைப்பாவே கோவமா காமிச்சிகிட்டப்போ எனக்கு சிரிப்புதான் வந்துச்சு...நீ உங்கப்பன மாதிரியே கூமாங்குடி .... எண்டா சாமி கும்புடமாட்டேங்கரன்னு நீ கேட்டப்போ நான் சாமியோடதான குடும்பம் நடத்தறேன்னு நான் சொன்ன பதிலுக்கு ஆரம்பிச்சிட்டான்டா ஜொள்ளு விடன்னு சொல்லிட்டு நீ சிரிச்சிட்டே போய்ட்ட..ஆனா, எனக்கு மட்டும்தான் தெரியும்..அந்த வார்த்தை எவ்ளோ உண்மைன்னு.. உங்கப்பா இறந்தப்போ நீ உங்கம்மா உன் தங்கச்சி எல்லாரையும் விட்டுட்டு என் மடில படுத்து எங்கப்பா இறந்துட்டாருடா...இனிமே நீ யார கிண்டல் பண்ணுவேன்னு கதறுனப்போ நான் கொஞ்சம் கலங்கிதாண்டி போயிட்டேன்.. பாப்புவ நீ அடிச்சிட்டேன்னு ஒருதடவ உன்கூட நான் ரெண்டு நாள் பேசாம இருந்தப்போ அன்னிக்கு நைட் என்ன கட்டிபுடிச்சு தேம்புனது..ஏண்டி அழறேன்னு கேட்டப்போ ஒண்ணுமே சொல்லாம தேம்பிகிட்டே இருந்தது... பாப்பு கல்யாணம் ஆகி பாரின் போனப்போ ஏர்போர்ட்ல பாப்பு புருஷன் என்ன எதோ கிண்டல் பண்ணி பாப்புகிட்ட வம்பு பண்ணி சிரிச்சிற்றுந்தப்போ, நீ குழந்தயாட்டமா பலிப்பு காமிச்சு உங்களுக்கு நல்லா வேணும்..எங்கப்பாவ எவ்ளோ கிண்டல் பண்ணீங்கன்னு சிரிச்சப்போ..ஏன்னு தெரில..எனக்கும் சிரிப்புதான் வந்துச்சு.. அப்பா அப்பான்னு என்னையே சுத்திகிட்ருப்பா..இன்னையோட என்கிட்டே போன்ல பேசி நாலு நாள் ஆகுது..நீ உங்கப்பாவ மறந்தப்போ அவருக்கும் இப்டிதான வலிச்சிருக்கும்..பாவம்டி உங்கப்பா..பொம்பள புள்ளைங்ககிட்ட மட்டும் ரொம்ப பாசமே வெக்ககூடாதுடி... உன்ன தவிர வேற யாரு இருந்திருந்தாலும் நானும் பாப்புவும் இவ்ளோ சந்தோசமா இருந்துருக்கமாட்டோம் குட்டி.. அடுத்த ஜென்மத்துலயும் நான் நானாவே பொறக்கணும்...சைந்தவிக்கு புருஷனா...நீ என் சைந்தவியாவே பொறக்கணும்...நான் மறுபடியும் உன்ன பொண்ணு பார்க்க வரணும்...மறுபடியும் நாம சந்தோசமா வாழனும்...இதுல எதுவும் மாறிடக்கூடாது...ஏன்னா சைந்தவியா பொறந்து தான் புருஷன சந்தோசமா மட்டுமே வெச்சுக்கறது எப்டீன்னு என் சைந்தவிக்கு மட்டும்தான் தெரியும்.. உங்கிட்ட ஒரு விசயத்த மறைச்சிட்டேன்...காலைலேர்ந்து எனக்கு லேசா நெஞ்சு வலிக்கற மாதிரியே இருக்குடி குட்டி..உன்கிட்ட சொன்னா பயப்படுவேன்னு சொல்லல..நான் போய் படுக்கறேன்..காலைல இந்த லெட்டெர படிச்சு பாரு...நீ எவ்ளவோ கெஞ்சி கேட்டும் நான் உங்கிட்ட இதுவரைக்கும் சண்டை போட்டதே இல்ல..ஆனா நாளைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரியே என்கிட்டே சண்டை போடுவேன்னு தோணுது.. என்ன எழுந்திரிக்க சொல்லி...!! ஐ லவ் யு சைந்தவி... சைந்தவி புருஷன்.. இப்படிக்கு சைந்தவி, W/O சிபி ( இன்னும் சில நூறு ஜென்மங்களுக்கு) சைந்தவி புருஷனுக்கு, சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்தையுமே உன் கிட்ட காண்பிச்சதில்ல. எழுதி எழுதி கிழிச்சுப்போட்டு மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டே அழறதுலையும் அப்படி ஒரு அல்ப சந்தோஷம்! தவிர நான் எழுதினா நீ கிண்டல் பண்ணி அழவைப்பேன்னும் தெரியும்! என்னை எப்படிடா கண்டுபுடிச்ச நீ? மேட்சிங்கா டிரஸ் கூட பண்ணிக்கத் தெரியாத என்னை எப்படியெல்லாம் நீ மாத்தின தெரியுமா? நீ வந்து பொன்னு பார்த்துட்டுப் போன பின்னாடி தான் எனக்கே தெரியும் நானும் கொஞ்சம் அழகாதான் இருந்திருக்கேன்னு. பொன்னுங்களோட உள்ளுணர்வு ஒன்னு இருக்கு. கடவுளைவிட சரியா சொல்லிடும். உன்னைப் பார்த்தப்போ தோணுச்சுடா அது, நான் இந்த உலகத்துலயே ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு! அது பொய்யே ஆகலை , இந்த நிமிஷம் வரைக்கும்! கல்யாணம் ஆன புதுசுல நான் எப்ப சண்டை போட வந்தாலும் விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து என்னை ஜெயிச்சிருக்க.என் மேல உனக்குக் கோபமே வராதாடா திருடா! உன் கூட ஒரு சண்டையாவது போடனும்னு மல்லுக்கட்டி நின்னப்பக் கூட பதிலுக்கு முத்தமாக் கொடுத்து என்னை காலி பண்ணிட்டியேடா ராஸ்கல்! என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எங்க எங்கயோ ஃபாரின்ல செட்டில் ஆனாங்க. ஆனா சொர்க்கத்துல செட்டில் ஆனது நான் மட்டும் தான்னு நினைக்கிறேன்! எல்லாப் பொண்ணுங்களைப் போல பையன் தான் பொறக்கனும்னு பிடிவாதமா இருந்தேன். எல்லாப் புருஷனுங்க மாதிரி பொன்னுதான் பொறக்கனும்னு நீயும் பிடிவாதமா இருந்த. நான் தோத்துப் போனாலும் உன்னை ஏமாத்தலைடா! பாப்பு வந்தப்புறம் நீ கொஞ்சம் மாறிதான் போயிட்ட. வேலை முடிஞ்சு வந்ததும் முன்னெல்லாம் என் புடவைல முகத்தை துடைச்சிப்ப , வேர்வை இல்லைன்னாலும்.. பாப்பு வந்தப்புறம் வேலை முடிஞ்சு வந்ததும் நேரா அவளைக் கொஞ்சப் போயிடுவ! என் பொண்ணா இருந்தாலும் அவ மேல ஒரு சின்ன பொறாமையே இருந்துச்சு. இதை நான் என் அம்மக்கிட்ட சொன்னப்போ "ரெண்டு குழந்தைகளை வச்சு உன் புருஷன் எப்படி சமாளிக்கிறார்?"னு விஷமத்தனமா கேட்டா. அப்பாவும் பொன்னும் சேந்து கொஞ்ச நஞ்ச லூட்டியாடா அடிச்சீங்க. நீ ஆஃபீஸை கட் அடிச்சுட்டு அவளை ஸ்கூலை கட் அடிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் சினிமா பார்க்கப் போனீங்களே..எங்கயாவது உலகத்துல இந்தக் கூத்து நடக்குமா? சமையல் பண்ணும்போது எத்தனை தடவை பின்னாடி பூனை மாதிரி வந்து இடுப்பைக் கிள்ளி சாம்பாரைக் கொட்ட வச்சுருப்ப! எத்தனை தடவ சமையல்கட்டை வெக்கப்பட வச்சிருப்ப! ஆனா அதுக்கெல்லாம் பதிலுக்கு உன்னை எப்படி பழி வாங்கிருக்கேன் தெரியுமா? பட்டுப்புடவை சரசரக்க மல்லிகைப்பூவோட உன் முன்னால குறுக்கும் நெடுக்கும் போய் இன்னிக்கு "அது" வேணாம்னு சொல்றப்போ உன் மூஞ்சி ஒரு தினுசா போகும் பாரு...அடடா...அதுக்காகவே இன்னும் நூறு குழந்தை பெத்துக்கலாம் போல இருக்கும். நீயும் என்னை சும்மாவா விட்ட? அதுக்காக பாவி என்னை எத்தனை முறை கெஞ்ச விட்டுருப்ப.. ராட்சஸா! ஆமா ஹனி மூன்ல எனக்கு ஒரு ஒரு கிஃப்ட் கொடுத்தியே... இதுவரைக்கும் எந்த புருஷனாவது தன் புது பொண்டாட்டிக்கு அப்படி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பான்னு நினைக்கிற? அதை பிரிச்சுப் பார்த்ததும் என் முகத்துல வந்த நூறு கிலோ வெக்கம் என்னை விட்டு போறதுக்கு மூனு மாசம் ஆச்சுடா! நம்ம பாப்புவுக்கு விஷ்வா அந்த மாதிரி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பானாடா. எனக்கு கிடைச்ச மாதிரி அவளுக்கும் அவன் சிபியா இருப்பானா ... தெரியல.. ! ஆரம்பத்துல நீ எங்கப்பாவை கிண்டல் பண்ணப்பயெல்லாம் எனக்கு அழுகையா வரும். கொஞ்ச நாள் கழிச்சு லேசா சிரிப்பு வந்தது..அப்புறமா பாப்பு கிட்ட அவ புருஷன் உன்னைக் கை காண்பிச்சு சிர்ச்சுக்கிட்டிருந்தப்போ நீ பார்த்துக்கிட்டுருந்த பார்வைல தான் எவ்வளோ பெருமிதம். எங்கப்பாவுக்கும் அன்னிக்கு அப்படிதானே இருந்திருக்கும். சே! அதுக்குப் போய் அழுதிருக்கேனே! யோசிச்சுப் பார்த்தா... கல்யாணம் ஆகி ஒரு நாலஞ்சு வருஷத்துல என்னை சேர்ந்தவங்க எல்லாரும் எனக்கு அன்னியமா தெரிய ஆரம்பிச்சாங்க. அந்தளவுக்கு நீ என்னை ஆக்கிரமிச்சிருந்த! நான் உனக்கு அப்படி என்னடா பண்ணினேன்? எதுக்காகடா என் மேல அவ்வளோ பாசத்தைக் கொட்டுன நீ? உலகத்துல இவ்வளவு சந்தோஷமா ஒரு மனைவி இருப்பாளாடா? இத்தனையும் இப்ப எதுக்குன்னு கேக்கறியா?முதல்லயே சொன்னேனே "உள்ளுணர்வு". இதுவரைக்கும் என் உள்ளுணர்வு தவறினதே இல்லை. எனக்கு என்னமோ பயமாவே இருக்குடா. உனக்கு ஏதோ ஆயிட்டுருக்கு.எதையோ என் கிட்ட இருந்து மறைக்கிற. எதை என்கிட்ட இருந்து மறைக்க நினைச்சாலும் உன் கண்ணு காட்டிக் கொடுத்துடும். இன்னைக்குக் காலைல இருந்து உன் கண்ணு என் கிட்ட பொய் சொல்லத் திணறுது. உனக்கு ஏதாவது ஒன்னுன்னா அதுக்கப்புறம் இந்த உலகம் எப்படி சுத்தும்ங்கிறதை பார்க்கிற தைரியம் எனக்கில்லை. எப்பவும் கிழிச்சுப் போடுற லெட்டரை இந்த முறை கிழிச்சுப் போடணும்னு தோணலை. இன்னும் என்னென்னவோ எழுத தோனுதுடா... நாம போன ஆல் இண்டியா டூர்..ஒரு தடவை நீ ரேடியோல ப்ரோகிராம் பண்ணது... நான் டைஃபாய்ட்ல கிடந்தது.. ஏதேதோ ஞாபகத்துக்கு வருது..அதெல்லாம் அப்படியே எழுதினா , அழுது லெட்டர் ஈரமாகிடும்.வேண்டாம்! இப்போ என்னோட இந்த நினைவுகளை டேபிள் மேல வச்சிடறேன். ஒரு வேளை நாளைக்கு உனக்கு இதை படிக்கிற சந்தர்ப்பம் இருந்து என்னைக் கிண்டல் பண்ணாலும் பரவாயில்லை. இப்போ உன்னைக் கட்டிப்புடிச்சுத் தூங்கணும் போல இருக்கு. உன்கிட்ட சொன்னா "போடி கெழவி..."ன்னு கிண்டல் பண்ணுவ. அதனால ஹனிமூன்ல நீ எனக்குக் குடுத்த கிஃப்டை கட்டிப் புடிச்சுத் தூங்க போறேன். இப்படிக்கு உன் செல்ல பொண்டாட்டி சைந்தவி ************************************************************************************** இன்றைக்கு தான் எல்லா சடங்கும் முடிந்தது. வீட்டை சுத்தம் செய்யும் போது இந்தக் கடிதம் என் கைக்குக் கிடைத்தது.அங்கிள் கடிதம் எழுதும்போது இந்தக் கடிதம் டேபிள் மேல்தான் இருந்திருக்கவேண்டும்.இதை அங்கிள் வாசித்திருப்பாரா?...தெரியவில்லை.என்ன மாதிரி அடர்த்தியான காதல் இது. வாழ்க்கையில் எதையும் நாம மிஸ் பண்ணிடக் கூடாது பாப்பு.இவங்களை நெனைச்சா சந்தோஷமா இருக்கு. ஆனா இப்பொ மனசு முழுக்க வெறுமையா இருக்கிறது நிஜம்.அழுது வீங்கின கண்களுடன் பாப்பு என் நெஞ்சில் முகம் புதைத்து தூங்கிக் கிட்டிருக்கா. இவளை நான் எப்படி காதலிக்கப் போறேன்? யெஸ்... ஆன்ட்டி கட்டிப்புடிச்சுத் தூங்கின அந்த ஹனிமூன் கிஃப்ட். அது என்னவாயிருக்கும்? " கனத்த இதயத்துடன் தன் டைரியை மூடிய படி, பாப்புவை தலையணையில் கிடத்திவிட்டு , அரை வெளிச்சத்தில் அந்த கிஃப்டை தேடத்துவங்கினான் விஷ்வா.

    இந்த கதைக்கு பொருத்தமான வகையை கீழே கிளிக் செய்யுங்கள்.

    Comments (0)

    இந்த கதை பற்றி உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

    Your Name
    E-mail (Will not appear online)
    Comment