Tamil kamakathaikal new தளத்தில் வரும் தமிழ் காம கதைகள், பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே..

Tamil Kamakathaikal New

Read latest tamil kamakathaikal

  • ஐ லவ் யு சைந்தவி... ...1 , 2 , 3 . 4  ஐ லவ் யு சைந்தவி... ...3 மிஸ் யு சைந்தவி - சிபி எனக்கு பெருசா எதுவும் வேணாம்டா..நீ சாப்டும்போது உன் கைய்யால ஆசையா ஒரு வாய் எனக்கு ஊட்டிவிடு..எனக்கு அது மட்டும் போதும்..காலம் புல்லா உன்னோட வாழ்ந்துட்டு ஒரு நாள் சந்தோசமா செத்து போயிருவேன்..ஜீன்ஸ் டி.ஷர்ட் போட்டுக்கிட்டு என் சைந்தவி ஒரு நாள் என் கண்ணபார்த்து சொன்னப்போ எனக்கு ஒரு விஷயம் தோனுச்சு..ஜீன்ஸ் டி ஷர்ட் போட்டுக்கிட்டு பொண்ணுங்க என்னதான் மாடர்னா காமிச்சுகிட்டாலும் பொண்ணுங்க பொண்ணுங்கதான்னு...மனசுக்கு புடிச்ச புருசன ஒரு பொண்ணால காதலிக்க முடிஞ்ச அளவுக்கு ஒரு பையனால தான் காதல் பொண்டாட்டிய காதலிக்க முடியாதுன்னு...சைந்தவி அவ காதலால என் காதல தோக்கடிச்சுகிட்டே இருக்கா...ஒவ்வொரு தடவையும்...! வாழ்க்கை அழகு பாஸ்...அதுவும் சைந்தவிங்க கெடைச்ச எல்லா சிபிக்களுக்கும் வாழ்க்கை சொர்க்கம்..! என் சைந்தவியும் பாப்புவும், பாப்புவோட ஸ்கூல் லீவுக்காக ஊருக்கு போயிருக்காங்க...பதினைஞ்சு நாள் என்ன தனியா விட்டுட்டு போயிருக்காங்க..யார்கிட்டயும் சிரிச்சு பேச புடிக்கல...கிரிக்கெட் மேட்ச் பார்க்க புடிக்கல...பாப்புவோட வெளாட்னும்போல இருக்கு...எப்ப பார்த்தாலும் லேப்டாப் நோண்டறத விட்டுட்டு நான் பேசறத கொஞ்ச நேரம் கேள்றா எருமைன்னு சைந்தவிகிட்ட திட்டு வாங்கணும் போல இருக்கு..தண்ணியடிக்கரத தவிர வேற எதுவுமே புடிக்கமாட்டேங்குது..(ச்சே கடைசி வரில தக்காளி வெளியூர்க்காரன் உள்ள வந்துட்டான்..டேய் வெளில போடா டேய்...) என் சைந்தவி ஊருக்கு போய் அஞ்சு நாளாகுது...அவள பார்க்கணும் போல இருக்கு..போன வாரம் ஏண்டி அந்த ப்ரேஸ்லெட்ட தொலைச்சன்னு அவள வம்புக்கு சண்டைக்கு இழுக்கணும் போல இருக்கு...ஏண்டி டிஸ்கவரி சேனல் பார்க்கரப்பல்லாம் எனக்கு உங்க அப்பா ஞாபகம் வருதுன்னு அப்பாவித்தனமா கேட்டு அவள கடுப்பேத்தனும் போல இருக்கு..நான் தூங்கரத அவ ரசிச்சு பார்க்கறத நான் தூங்காம இருந்து ரசிக்கணும் போல இருக்கு..அவ டிரஸ் பண்ணும்போது பக்கத்துலையே இருந்து அவ சிரிக்க சிரிக்க கமென்ட் அடிக்கணும் போல இருக்கு... இப்ப அவளும் என்ன கண்டிப்பா மிஸ் பண்ணுவாளா இருக்கும். ! என் சைந்தவிய நான் குழந்தைலேர்ந்து பார்த்து பார்த்து வளர்க்க முடியலயேங்கற வருத்தம் எனக்கு இருக்ககூடாதுங்கறதுக்குத்தான் என் சைந்தவியே வந்து எனக்கு மகளா பொறந்துருக்கா போல..அதே அழகு கண்ணு..கொழு கொழு கன்னம்..என் பாப்புவ பார்த்துகிட்டே இருக்கலாம் தெரியுமா...நான் இல்லாம ஊர்ல எவ்ளோ கஷ்டபட்றாலோ தெரில..அப்பாவ பார்க்கணும்.. என்னை என் அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு சைந்தவிக்கிட்ட அழுதுகிட்டே இருக்காலாம்.. அவ குட்டி பொண்ணு...அவங்கம்மாகிட்ட கேட்ருவா.. நான் யார்கிட்ட போய் கேப்பேன்..என் பாப்புவ பார்க்கணும்..என்னை கூட்டிட்டு போங்கன்னு..! மனசுக்கு புடிச்சவங்கள பிரியற பிரிவு ரொம்ப கொடுமை பாஸ்...அது பதினைஞ்சு வருசமா இருந்தாலும் சரி..பதினைஞ்சு நாளா இருந்தாலும் சரி..! ஒரு நிமிஷம் இருங்க சார்..நான் போய் பாப்புகிட்டையும் சைந்தவிகிட்டையும் ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்...என் தங்கபவுனு சாப்ட்டாலா என்னனு தெரில..பேசி அஞ்சு மணி நேரம் ஆச்சு...! என் குரலை கேக்கலைனா என் பாப்பு சாப்ட மாட்டா...! @சைந்தவி கெடைச்ச சிபிக்களுக்கு.// நீங்களும் ஒரு தடவ உங்க சைந்தவிகிட்ட எதேச்சையா சொல்ற மாதிரி இன்னிக்கு ஒரு தடவ ஐ லவ் யு சொல்லிருங்க...எல்லா சைந்தவிங்களுக்கும் தான் புருஷன் தன்கிட்ட அடிக்கடி ஐ லவ் யு சொல்றது ரொம்ப புடிக்கும்...கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆய்ருந்தா கூட...! @சைந்தவி கெடைக்காத சிபிக்களுக்கு.// சனியனே..உனக்கெல்லாம் அட்வைஸ் ஒரு கேடா...போ போய் எந்த கருமத்தயாச்சும் குடிச்சுபுட்டு வீட்டுக்கு போய் அக்கா மேல கை படாம குப்புற படுத்து தூங்கிரு..ஏதும் சில்மிஷம் பண்ணி எழுப்பிகிலுப்பி விட்டு அடி வாங்கிறாத எழவு..! சிபி Vs சைந்தவி  ஹலோ ஜுஜ்ஜு கண்ணு... ....என்ன மறந்துட்டியாமா.?" "நான் பிஸியா இருக்கேன்!.. நீ மொதல்ல போன வை...." "சரி பாப்பு கிட்ட குடு" "ஹாய் டாட்..!" "அம்மா என்ன பிஸியா இருக்காளா..?" "டி.வி பார்த்துட்டு இருக்காங்க.." அவ இப்படியே இருந்தான்னா, அப்பா டைவ்ர்ஸ் பண்ணிடுவேன்னு சொல்லு.." "ஃபோனை கையில் வைத்துக் கொண்டே "ம்மா...அப்பா உன்னை டைவர்ஸ் பண்ண போறாராம்...! "ரொம்ப சந்தோஷம்...சீக்கிரம் பண்ண சொல்லு! சரி சாப்பிட்டாச்சான்னு கேளு- சைந்தவி..! "ப்பா..சாப்ட்டியா!" "ம்ம்..சாப்டேன்டா குட்டி...! நீ என்னடா சாப்பிட்ட..! "ம்ம்..பிஸ்கெட்!" "அம்மா வெஜ் ரைஸ் பண்ணுவாளே...இன்னிக்கு பண்ணலையா,,? "பிஸ்கெட்டே பெட்டர்ப்பா.! ..அம்மா பார்க்கிற சானல் பயங்கர போர்.... எதுவுமே புரியாம ரொம்ப நேரமா டிஸ்கவரியே வச்சிருக்கா!....எப்போப்பா வர்ற நீ!" "அப்பாக்கு பயங்கர வேலைடா கண்ணு!" ஃபோனை சட்டென புடுங்கிய சைந்தவி " அங்க என்ன இப்போ வெட்டி முறிக்கிறீங்க?" "நேத்து என் பாஸ் குடுத்த ஆடிட் ரிப்போர்ட்ல.." "உண்மையை சொல்லு!" "அது ப்ளாக்ல ஒரு ஆர்டிக்கில் படிச்சிட்ருந்தேன்..! "கஷ்டம்! ப்ளாக்னால டைவர்ஸ்னா ஜட்ஜ் சிரிப்பார்..!" "அடிப்பாவி...டைவர்ஸ் பண்ணிடறதா முடிவே பண்ணிட்டியா..?" "சொன்ன வார்த்தையைக் காப்பாத்தாத நீயெல்லாம் என்ன புருஷன்?" "ஹேய்! கூல் கூல்.. பெரிய வார்த்தையெல்லாம் பேசாத!".. ..!" "நேத்து என்னடா சொன்ன? நாளைக்கு ஒரு நாள் நான் சமைக்கிறேன்னு சொன்னேல்ல. உன்ன நம்பி இப்போ நானும் பாப்புவும் பட்டினி .! பக்கத்து அறையில் இருந்து எழுந்து வந்து சிபி மேல் ரிமோட்டை எறிந்தாள் சைந்தவி. அப்பாடா என்ற பாப்புவிடம் ரிமோட் கிடைத்த மறு வினாடி டி.வி கார்ட்டூன் சானலுக்கு மாறியது. "பக்கத்து ரூமில தான இருந்த...அப்புறம் என்ன ஃபோன்?"- சைந்தவி "நீ ஏர்டெல் விளம்பரம் பார்த்ததில்லையா..." "எனக்குன்னு அமைஞ்சிருக்கு பாரு..கடவுளே!..கையை எடுங்க...ஹேய் இன்னிக்கு நோ கொஞ்சல்ஸ்! நான் சொல்லித் தறேன்..நீங்க சமைச்சே ஆகனும்! என்ன செஞ்சாலும் குறை சொல்றாளே உங்க அருமைப் பொண்ணு... அவளுக்கு அவங்கப்பா லட்சணம் தெரியணும்...அப்போதான் வாயை மூடிட்டு ஸ்கூலுக்கு நான் குடுத்தனுப்பறதை எடுத்துட்டுப் போவா!" சிபியும் சைந்தவியும் கிச்சனுள் எகிப்து,லிபியா ரேஞ்சுக்கு புரட்சி ஒன்று நடத்திக் கொண்டிருக்கையில் டெலிஃபோன் அலறியது. பாப்பு எடுத்தாள். "ஹலோ" "ஹலோ பாப்பு குட்டி .. சிபி இருக்கானா?" "ம்ம்...அப்பாவும் அம்மாவும் கிச்சன்ல.." "சமையல் பண்றாங்களா.." "இல்ல அங்கிள் .ரெஸ்ட்லிங்!" "அப்போ நீ இன்னைக்கு சாப்பிட்டா மாதிரி தான்!" "இல்லை அங்கிள்...இது வேலைக்கு ஆவாதுன்னு தெரியும்!அதான் அப்பொவே ஒரு பீட்ஸா ஆர்டர் பண்ணிட்டேன்!" இதைக் கேட்ட உடன் சடாரென வெளியே வந்தனர் சிபியும் சைந்தவியும். யாருடா போன்ல.?.. "பிள்ளைக்கு சாப்பாடு செய்யுங்கன்னா கிச்சன்ல உக்காந்து லவ்வா பண்றீங்க!" பார்த்துகிட்டே இருங்க..என்னிக்கோ ஒரு நாள் உங்க ரெண்டு பேரையும் நான் டைவர்ஸ் பண்ணபோறேன் ...! இந்தாங்க வந்து பேசுங்க..அங்கிள் லைன்ல இருக்காரு..! வெஜ் ரைஸ் என்கிற பெயரில் இருந்த வெந்தய களியை அசடு வழிய பார்த்துகிட்டே போனை வாங்கி ஹலோ சொல்லிய சிபியின் முகம் மலர ஆரம்பித்தது...! நிலம் நெருப்பு நீர் சிபி சைந்தவி., சைந்தவி சிபி... இந்த பேர படிச்ச உடனே கார்னேட்டோ ஐஸ்க்ரீம காதல்ல கரைச்சு இதயத்துக்குள்ள ஊத்துன மாதிரி இருக்கா..அப்போ நீங்களும் சிபி சைந்தவி ஜோடிய காதலிக்கற காதலர்கள்..உள்ள வாங்க பாஸ்...சிபியையும் சைந்தவியையும் உங்கள்ளுக்கும் எனக்கும் மட்டும் இல்ல...காதல்னா காரி துப்புர கம்னாட்டிங்களுக்குகூட இந்த காதல் ஜோடிய புடிக்கும்.. ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு இவங்க ரெண்டு பெரும் அடிக்க போற ஜாலி கலாட்டகள நீங்க மறுபடியும் ரசிக்க போறீங்க...இந்த பதிவ புதுசா படிக்கறவங்களுக்கு சைந்தவி சிபியா பத்தின ஒரு சின்ன அறிமுகம்.. சிபி : ஒவ்வொரு வெள்ளிகிழமை காலைலயும் கல்யாணம் ஆகாத பிகருங்க கருக்கல்ல குளிச்சிட்டு ஈரத்தலையோட சாமி முன்னாடி நின்னு மணிக்கணக்கா வேண்டறது சிபி மாதிரி ஒரு ரொமண்டிக் புருஷன் தனக்கு கெடைக்கணும்கரதுகாகதான்..அதுக்காக ரேபான் க்ளாஸ் போட்டுக்கிட்டு எல்பாசோ வாசனைல கார்ல வந்து எறங்கி இங்க்லீஸ்ல தும்முற ஹை கிளாஸ் டிக்கெட் இவன்னு தப்பா நெனைச்சிறாதீங்க... ரெண்டு கட்டிங் கூட போய்ட்டா இவன் பேசற கெட்ட வார்த்தைல பாரே நாறும்...இன்னும் ரெண்டு கட்டிங் கூட போயிட்டா ஊரையே நாரடிச்சிருவான்...அதே மாதிரி பிகருங்க இவன்கிட்ட பத்து நிமிஷம் பேசுனா போதும்...வீட்டுக்கு போய் நைட் பெட்லேர்ந்து உருண்டு கீழ விளர வரைக்கும் சிரிச்சுகிட்டே இருப்பாங்க...அவ்ளோ ஜோக் அடிப்பான் இந்த ரொமண்டிக் ராஸ்கல்...இந்த கதைய படிக்க போற பசங்களுக்கு சிபிய புடிக்குதோ இல்லையோ...பிகருங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்...அப்டி ஒரு ரொமாண்டிக் இடியட்...நீயும்தான் இருக்கியே மடசாம்ப்ரானின்னு பசங்க தான் கேர்ல் பிரெண்டுகிட்ட கொமட்டுகுத்து வாங்காம இருக்கணும்னா இந்த கதைய உங்க கேர்ல் பிரெண்ட்ஸ படிக்க விட்ராதீங்க...! சைந்தவி இந்த பேர படிச்சோன்னையே சும்மா ஜிவ்வுங்காதா...? அதான் சார் சைந்தவி..சிபிய கல்யாணம் பண்ணிருக்கற பொண்ணு...இல்ல இல்ல..சிபிய கல்யாணம் பண்ணிருக்கரதுக்காக பொறந்த பொண்ணு..இவ ரொம்ப அழகெல்லாம் இல்ல...ஆனா,ஸ்பென்சர்ல இவ க்ராஸ் பண்ணி போனா கண்டிப்பா ஒரு தடவ திரும்பி பார்க்கலாம்..அப்டி ஒரு அழகு...நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளா அப்டி இருப்பாளான்னு தமிழ்நாட்டு பசங்க மல்லாக்க படுத்து பைனல் எக்ஸாம்க்கு மொதோ நாள் யோசிச்சு வெச்ச எல்லாமாதிரியும் இருப்பா இவ...தங்கமான பொண்ணு...அதுக்காக கொத்தமல்லி சட்னியும் புதினா துவையலும் அரைச்சு வெச்சுகிட்டு புருஷன் எப்ப வருவான்னு வாசலையே பார்த்துகிட்ருக்கற சீரியல் குடும்ப பொண்ணுன்னு நெனைச்சிறாதீங்க... வெத்தகொழம்பு எவ்ளோ நல்லா வெக்க தெரியுமோ, அத விட நல்லா குவாண்டம் பிசிக்ஸ் தெரியும்...ஹிண்டுல வர்ற க்ராஸ் வேர்ட் பஸ்ஸுல கிட்டத்தட்ட டெய்லி முடிக்கற அளவுக்கு ப்ரில்லியன்ட் பட்டாசு இவ.. வழக்கமா எல்லா ரொமான்டிக் ராஸ்கல்களுக்கும் சாஃப்டான ஒரு ஜோடி தான் கிடைக்கும்ங்கறது ஏ.வி.எம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து சம்பிரதாயம்! ஆனா இந்த சைந்தவி இருக்காளே... இவ மாதர் குல லஷ்கர் இ தொய்பா....! இவங்க ரெண்டு பேரோட காதல் கலாட்டாவதான் நீங்க இனிமே படிக்க போறீங்க... அம்மா நூறு டெசிபலில் கத்தினாள். "சைந்தவீ...ஃபோன் அடிக்குது பாரு..." சைந்தவி எரிச்சலாக வந்தாள். அப்பாவுக்கான ஃபோனா இருக்கும். இன்னும் எல்லார்ட்டையும் லேன்ட்லைன் நம்பர் கொடுக்கற புண்ணியவான். 'ஹலோ.." "சைந்தவிஇருக்காங்களா..?" "நீங்க..?" "நாங்க ஆர்டிஓ ஆஃபீஸ்ல இருந்து பேசறோம்..இன்னும் இந்த வருஷம் நீங்க டாக்ஸ் ஃபைல் பண்ணலை.இது சட்டப்படி குற்றம்.இதுக்கு எகனாமிக் அஃபன்ஸ் ஆக்ட் 568 சி படி எவ்வளோ அபராதம் தெரி..." "ஆர்டிஓ ஆஃபீஸ்ல இருந்து டேக்ஸா...ஹேய் ஹேய்...இரு...! யார் இது...? யேய்சிபி..நீதான...!" "ஹா..ஹா...கண்டுபுடிச்சுட்டியா...எனக்கு குடுக்க வேண்டியதை குடுத்திருந்தா நான் ஏன் உன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி கேக்கப்போறேன்" "அடப் பாவி...அதுக்காக உன்னை யாரு லேண்ட் லைனுக்கு பண்ண சொன்னது?அம்மாவுக்குத் தெரிஞ்சா...! சரி எங்க வரணும் சொல்லு வந்து குடுத்துத் தொலைக்கிறேன்" "சரியா அரை மணி நேரத்துல உங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்ல வந்து நில்லு..நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...!" யாருடி அது ஃபோன்ல...? ரிசீவரைப் பொத்தி..."உனக்குதான்மா...! ரிசீவரை அம்மா கையில் கொடுத்தாள். "ஹலோ யாரு.." சிபி உஷாரானான். "இந்த டியூனை காப்பி பண்ணனும்னா ஸ்டார் மற்றும் ஒன்பதைஅழுத்துங்க. வேண்டாம்னா வீட்ல டேப் ரிக்கார்டர்ல போட்டு கேளுங்க.." ஃபோனை டக்கென வைத்துப் பெருமூச்சு விட்டான். ராட்சசி...! சரியாக அரைமணியில் சைந்தவி பச்சை சல்வாரில் பஸ் ஸ்டாப்பை அடைந்திருந்தாள். கண்ணுக்கெட்டின தூரம் வரையில் யாரும் வரவில்லை ஒரே ஒரு நகர பேருந்தை தவிர. எங்க போய் தொலைஞ்சான் இந்த சிபி என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே பஸ்ஸினுள் இருந்து குரல் கேட்டது... சைந்தவி..வா ஏறு...! ராஸ்கலே தான். "வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்ன...!" - சைந்தவி. "ஆமா அதான் பிக்கப் பண்ணிட்டேன்ல..பஸ்லன்னு சொல்ல மறந்துட்டேன்...!" அடக்கடவுளே இவனோட எப்படி லைஃப் முழுக்க ..என்று யோசித்த படியே சிபியோடு பின் சீட்டில் அமர்ந்தாள். சரி இப்பக் குடு - சிபி "அய்யோ பஸ்லயா...என்ன விளையாடறியா?" "சரி! அடுத்த ஸ்டாப்ல ஒரு பார்க் வரும்..யாரும் இருக்க மாட்டாங்க!" சிபி ... உனக்கு விவஸ்தையே கிடையாது! சரி இறங்கினவுடனே குடு! சிபி...நீ அடங்க மாட்ட! முதல்ல என்னை வீட்ல கொண்டு போய் விடு. அம்மா தேடுவாங்க! அடிப்பாவி! நேத்து அப்படி கொஞ்சினே! "ம்ம்..அது ஃபோன்ல..போர்வையை ஃபுல்லா போர்த்திட்டு ஒரு தைரியத்துல சொல்லிட்டேன்.அதுக்காக இப்படியா பப்ளிக்ல..! உன்னை ரெண்டு நாள் காயப்போட்டாதான் சரிப்படுவ!" "அப்போ இன்னைக்கு கிடையாதா?" "இன்னிக்கு அதுக்கு சண்டேடா செல்லம்....இப்போ சமர்த்தா என்னை வீட்ல கொண்டு போய் விடுவியாம்..இல்லைன்னா...இந்த வாரம் முழுக்க சண்டே தான்..!" சே..என்றிருந்தது சிபிக்கு. எவ்வளவு ஆசையாக வந்தோம். -ஜஸ்ட் ஒன்னு கூட கிடைக்கலையே என வெறுப்பு உச்சந்தலையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது. ம்ஹ்ம்...ஓகே! வா உங்க வீட்டுக்குப் போகலாம்! "வீட்டுக்கு உன் கூடவா...அவ்வளோதான் அம்மா தலைலயே ரெண்டு வைப்பா... இதே பஸ்ல ரிடர்ன் போயிக்கலாம்...ஸ்டாப்ல இறங்கி என் வீட்டுக்குப் போக எனக்குத் தெரியும். சார் கவலைப்படாதீங்க...!" "அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! வா " என்று முதலில் சைந்தவியை அனுப்பி வைத்து விட்டு சற்று நேரம் கழித்து சிபி சைந்தவி வீட்டுக்கு வந்தான். "வாங்க மாப்ப்ள...அப்பா எதுவும் தகவல் சொல்லி விட்டாரா! திடு திப்புன்னு வந்துருக்கீங்க...ம்மா சைந்தவி... அம்மாட்ட சொல்லி காஃபி போட சொல்லு!" "இல்லை மாமா வந்து, அப்பா அட்வான்சுக்கு மண்டபம் குடுத்துடீங்கலான்னு கேக்க சொன்னார்...இல்லை இல்லை.. மண்டபத்துக்கு அட்வான்ஸ்......." சைந்தவி அப்பாவோட மீசையை பார்த்து, சிபி நாக்கு பயத்துல உளறி கொட்ட ஆரம்பித்தது... ஆறாங்கிளாஸ் பயாலஜி டீச்சரைத் தவிர சிபி இப்படி தடுமாறி அவனே பார்த்ததில்லை. " ஹா ஹா புரியுது மாப்ள ..நீங்க சைந்தவிட்ட பேசிட்டு இருங்க..நான் இதோ வந்துடறேன்!" மீசை வைத்த கதர் துண்டு பார்ட்டியானாலும் மேன்மக்கள் மேன்மக்களே. ஹாலில் யாருமில்லை. சைந்தவி அம்மா வர அம்பது வினாடிகளாவது ஆகும். சடாரென சைந்தவியை இடுப்போடு அணைத்து சத்தமே இல்லாமல் சைந்தவிக்கு காது மூக்கு கண் எல்லாம் சிவக்க ரெண்டு முத்தங்கள் கொடுத்தான் சிபி.சைந்தவியால் திமிறக்கூட முடியவில்லை...அட்ரினலின் உச்சத்தில் இருந்தது. ராட்சஸன்...சாதிச்சுட்டான் என நினைத்து உதட்டை துடைத்து கொள்ளவும், அம்மா காஃபி கொண்டு வரவும் சரியாக இருந்தது. "என்னடி பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்க...மாப்ளக்கு காஃபியை கொடு... சைந்தவீ....மாப்ளைக்கு ஸ்வீட் கொடுத்தியா" ரெண்டு ஸ்வீட் அவனே..ஸாரி! அவரே எடுத்துக்கிட்டாரும்மா ...! என்னடி உளர்ற...? உள்ளே இருந்து சவுண்ட் வந்தது... சைந்தவி அப்பாதான்... "ஏய்...அவங்க மாத்தி மாத்தி உளறிக்கட்டும்...நீ விட்ரு!"

    இந்த கதைக்கு பொருத்தமான வகையை கீழே கிளிக் செய்யுங்கள்.

    Comments (0)

    இந்த கதை பற்றி உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

    Your Name
    E-mail (Will not appear online)
    Comment